வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 3 பிப்ரவரி 2020 (18:16 IST)

லாஸ்லியாவின் முதல் பட ஹீரோ யார் தெரியுமா?

கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களை ஒருவரான லாஸ்லியாவுக்குத்தான் முதன் முதலாக ஆர்மி தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. லாஸ்லியாவின் ஆர்மி அவரது புகழை பாடிக்கொண்டு லாஸ்லியாவை தினந்தோறும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆக்கிக் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் லாஸ்லியாவுக்கு கவினுடன் காதல் ஏற்பட்டபோது கடைசி வரை லாஸ்லியா ஆர்மியினர் ஆதரவு தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் லாஸ்லியா தமிழ் திரைப்படங்களில் நடிக்க கதை கேட்டு வருவதாக கூறப்பட்ட நிலையில் அவருக்கு முதல் பட வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர் நடிக்கவுள்ள முதல் படத்தில் ஆரி நாயகனாக நடிக்கவிருக்கிறார். இவர் ஏற்கனவே  நயன்தாராவின் ’மாயா’ படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஆரி, லாஸ்லியா முதல்முறையாக இணையும் இந்தப் படத்தை இயக்குபவர் மற்றும் தயாரிப்பவர் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது. லாஸ்லியா மேலும் சில படங்களில் நடிக்க கதைகள் கேட்டு வருவதாகவும் இதுகுறித்த தகவல் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது