செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 14 டிசம்பர் 2020 (07:49 IST)

ரஜினியை அடுத்து கமல் கெட் அப்பில் ஹரிஷ் கல்யாண் – கவனம் ஈர்க்கும் ஸ்டார் போஸ்டர்ஸ்!

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகும் ஸ்டார் படத்தின் இரண்டாவது போஸ்டர் நேற்று வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண், ரைசா நடித்த காதல் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்தை யுவன் தயாரிக்க புதுமுக இயக்குனர் இளன் இயக்கி இருந்தார். இந்நிலையில் இப்போது மீண்டும் யுவன் , ஹரிஷ் கல்யாண் மற்றும் இளன் கூட்டணியில் புதிய பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த படத்துக்கு ஹே (HEY)எனப் பெயரிடப்பட்டுள்ளதாக  முதலில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஸ்க்ரின் சீன் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

ஆனால் இன்று ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் முதல் லுக் போஸ்டரும் பெயரும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தளபதி ரஜினிகாந்த் கெட் அப்பில் ஹரிஷ் கல்யாண் நிற்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. மேலும் அந்த படத்துக்கு ஸ்டார் எனப் பெயரிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

அந்த போஸ்டர் வெகுவாக கவனம் ஈர்த்ததை அடுத்து இப்போது சிவப்பு ரோஜாக்கள் கமல் கெட் அப்பில் ஹரிஷ் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரும் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.