1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 4 அக்டோபர் 2020 (14:47 IST)

கமல் சிம்பு படம் வதந்தியா? உண்மையா? பரபரப்பு தகவல்

கமல்ஹாசன் நடிக்கும் படமொன்றில் சிம்பு நடிக்க இருப்பதாகவும் இது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த தகவல் உண்மை என்று ஒரு சிலரும் வதந்தி என்று ஒரு சிலரும் கூறி வருகின்றனர் 
 
உண்மையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் சிம்பு நடிப்பதாக இருந்தது. ஆனால் அதன்பின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் லோகேஷ் கனகராஜ் பேச்சுவார்த்தை நடத்தியதால் அந்த கதை அப்படியே கமல்ஹாசனுக்கு மாறிவிட்டது 
 
இந்த நிலையில் சிம்பு நடிக்க இருந்த படத்தில்தான் கமல்ஹாசன் நடிக்கிறார் என்றும் அதனால் கமல்-சிம்பு நடிக்கும் படம் உருவாகவில்லை என்றும் கூறப்பட்டது. ஆனால் இன்னொரு பிரிவினர் இதுகுறித்து கூறும்போது ’சிகப்பு ரோஜாக்கள்’ படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருப்பதாகவும் அதில் சிம்பு முக்கிய கேரக்டரிலும், கமல் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த தகவலை வைத்து தான் கமல்-சிம்பு படம் உருவாகிறது என்றும் கூறி வருவதாகவும் தெரிவித்து வருகின்றனர் 
 
உண்மையில் கமல்-சிம்பு இணைந்து ஒரு படத்தில் நடிப்பார்களா? என்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளி வந்தால் மட்டுமே அது நம்பகத் தன்மை உடையதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது