1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 29 டிசம்பர் 2020 (19:34 IST)

கலைப்புலி எஸ்.தாணுவிற்கு புதிய பதவி: திரையுலகினர் வாழ்த்து

திரையுலகில் கடந்த 50 ஆண்டுகளாக தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வருபவர் கலைப்புலி எஸ் தாணு. இவர் தனது அனுபவத்தில் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் என்பதும் ஒரு சில தோல்விப் படங்களை கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இருப்பினும் ஒரு படத்தை எப்படி விளம்பரப்படுத்த வேண்டும் என்றும் வெற்றிப்படம் ஆக்குவது எப்படி என்ற சூட்சுமத்தை தெரிந்து வைத்துள்ள மிகச் சிலரில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது கலைப்புலி எஸ் தாணு அவர்கள் கலை உலகில் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததை அடுத்து அவருக்கு புதிய பதவி ஒன்று தேடி வந்துள்ளது
 
50வது ஆண்டில் அகில இந்திய திரைப்பட கூட்டமைப்பு தலைவராகியுள்ளார். தமிழ் திரையுலகம் சார்பாக பழம்பெரும் தயாரிப்பாளர்கள்.எஸ்.எஸ்.வாசன், நாகிரெட்டி, ஆகியோர் இப்பதவியை அலங்கரித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் தற்போது அகில இந்திய திரைப்பட கூட்டமைப்பின் 71வது தலைவராக 2021ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி தாணு அவர்கள் இந்த பதவியை ஏற்கவுள்ளார். இதனையடுத்து அவருக்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.