1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 28 டிசம்பர் 2020 (15:25 IST)

‘மாஸ்டர்’ படத்தின் முக்கிய அப்டேட்: தயாரிப்பாளர் வெளியிட்ட வீடியோ

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளியாகும் என்று கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் என்று எதிர்பார்க்கப்பட்டது 
 
இந்த நிலையில் சற்று முன் ‘மாஸ்டர்’ படம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று நாளை பிற்பகல் 12.30 மணிக்கு வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இதிலிருந்து நாளை இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது 
 
ஆனால் அதே நேரத்தில் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தான் நாளை வெளிவரும் என்றும் டிரைலரில் தான் இந்த படத்தின் ரிலீஸ் தேதி இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது 
 
எது எப்படியோ ‘மாஸ்டர்’ படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை மதியம் வெளியாக உள்ளதால் விஜய் ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது