ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : சனி, 17 ஜூன் 2023 (14:51 IST)

நான் அப்படி சொல்லவே இல்ல.... பரபரப்பான செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்த காஜல் அகர்வால்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் முன்னணி நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடித்துவிட்டார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற வேற்று மொழி படங்களிலும் நடித்துள்ள அவர் அங்கும் முதன்மை கதாநாயகியாக வலம் வருகிறார்.
 
இதனிடையே 2020ம் ஆண்டு தொழிலதிபர் கௌதம் கிட்சுலுவை திருமணம் செய்துகொண்டார். அதையடுத்து அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. சமீபத்தில் நடிகை காஜல் சினிமாவை விட்டு விலக்கப்போவதாக செய்திகள் வெளியா பரபரப்பாக பேசப்பட்டது. 
 
இதனால் அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறாரரோ என்றும் ஒரு கேள்வி எழுந்தது. தற்போது இதற்கு விளக்கம் அளித்துள்ள அவர்,  நான் அப்படி சொல்லவே இல்லை, நான் சினிமாவில் இருந்து விலகவில்லை, இன்னும் நீண்ட காலத்திற்கு இருப்பேன் என தெரிவித்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.