ஆமாம் நான் பெரியம்மா; ஒப்புக்கொண்ட காஜல் அகர்வால்


Abimukatheesh| Last Updated: சனி, 30 செப்டம்பர் 2017 (18:52 IST)
நடிகை காஜல் அகர்வாலின் தங்கை நிஷாவுக்கு குழந்தை பிறக்க போவதாக செய்திகள் வந்த நிலையில் ஆமாம் பெரியம்மா ஆகப்போகிறேன் என காஜல் தெரிவித்துள்ளார்.

 

 
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் தற்பொது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். தமிழில் தொடர்ந்து பெரிய ஹீரோக்களுடன் ஜோடி போட்டு அசத்தி வருகிறார்.
 
காஜலின் தங்கை நிஷா அகர்வாலும் நடிகையாக நடித்துக் கொண்டிருந்தவர் தான். அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் ஆனது. தற்போது அவருக்கு குழந்தை பிறக்க உள்ளதாக செய்திகள் பரவியது. 
 
இந்நிலையில் இந்த செய்தியை உறுதிப்படுத்தும் விதமாக காஜல், ஆமாம் நான் பெரியம்மா ஆகப்போகிறேன் என சந்தோஷமாக கூறியுள்ளார். 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :