கார்த்தியுடன் முக்கிய வேடத்தில் ஜோதிகா?

VM| Last Modified புதன், 6 மார்ச் 2019 (18:16 IST)
'தேவ்' படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி  நடித்து வருகிறார்.


 
இந்த படத்துக்கு கைதி என பெயரிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்து வருகிறது,
 
இந்த படத்துக்கு பின்னர்   பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகும் படத்திலும், ஜீத்து ஜோசப் இயக்கத்தில்  நடிக்க கார்த்தி ஒப்பந்தமாகியுள்ளார்.
 
மலையாளத்தில் 'இயக்கிய ’த்ரிஷ்யம்' படத்தின் தமிழ் ரீமேக்கான 'பாபநாசம்' படத்தை இயக்கியவர் தான் ஜீத்து ஜோசப். இவர்   இயக்கும் படத்தில் கார்த்தியுடன் இணைந்து அவரது அண்ணி ஜோதிகா முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக  நடிக்க உள்ள நாயகியை படக்குழு தேடி வருகிறது.
 
ஜீத்து ஜோசப் படம் குறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. தற்போது இப்படத்தின் தொழில்நுட்பக் குழுவினரை இறுதிச் செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :