ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 29 ஏப்ரல் 2019 (18:59 IST)

கபடி விளையாட்டு திரைப்படத்தில் இரண்டு முன்னணி நடிகர்கள்

தமிழ் திரையுலகில் விளையாட்டு சம்பந்தப்பட்ட படம் என்றாலே வெற்றிப்படங்கள் தான் என்ற நிலை உள்ளது. 'சென்னை 600028' முதல் 'கனா' வரை பல விளையாட்டு வெற்றிப்படங்கள் வெளிவந்துள்ளது. அதிலும் குறிப்பாக தமிழர்களின் வீரவிளையாட்டான கபடி விளையாட்டு படம் என்றாலே வெற்றி உறுதி தான்
 
இந்த நிலையில் 'மாப்ளே சிங்கம்' இயக்குனர் ராஜசேகர் இயக்கவுள்ள ஒரு கபடி விளையாட்டு குறித்த படத்தில் தமிழ் சினிமாவின் இளம் முன்னணி நடிகர்களான ஜீவா மற்றும் அருள்நிதி இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இவர்கள் இருவரும் முதல்முறையாக இந்த படத்தில் இணைவதால் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
 
மேலும் இந்த படத்தின் நாயகியாக சிம்புவின் 'அச்சம் என்பது மடமையடா', 'கவுதம் கார்த்திக்கின் 'தேவராட்டம்' உள்ளிட்ட படங்களில் நடித்த மஞ்சிமா மோகன் நடிக்கவுள்ளார். மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருவதாகவும், இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது