புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 15 ஏப்ரல் 2019 (21:30 IST)

அருள்நிதியின் அடுத்த படத்தின் சென்சார் தகவல்கள்

தமிழ் திரையுலகின் இளம் கதாநாயகர்களில் ஒருவரான அருள்நிதி, தனக்கு பொருத்தமான கதையை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடித்து முடித்துள்ள அடுத்த படம் 'K13'
 
இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தொழில்நுட்ப பணிகளும் இரவுபகலாக நடந்த நிலையில் இன்று இந்த படத்தை சென்சார் அதிகாரிகள் பார்த்தனர். இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். இதனையடுத்து இந்த படத்தை ரிலீஸ் செய்ய  சரியான ரிலீஸ் தேதியை தேர்வு செய்யும் பணியில் படக்குழுவினர் உள்ளனர்.
 
அருள்நிதிக்கு ஜோடியாக 'நேர்கொண்ட பார்வை' நாயகி ஷராதா ஸ்ரீநாத் நடித்துள்ள இந்த படத்தில் யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையில் அரவிந்த்சிங் ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை எஸ்பி சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது, சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது