வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 18 ஏப்ரல் 2018 (12:22 IST)

கணவரின் படுக்கைக்கு இளம்பெண்களை அனுப்பிய ஜீவிதா: சமூக சேவகி குற்றச்சாட்டால் பரபரப்பு

பிரபல நடிகை ஜீவிதா, தனது கணவரின் படுக்கைக்கு இளம்பெண்களை அனுப்பியதாக சமூக ஆர்வலர் ஒருவர் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
தெலுங்கு தனியார் தொலைக்காட்சியின் விவாதம் ஒன்றில் கலந்து கொண்ட சமூக ஆர்வலர் சந்தியா என்பவர் நடிகை ஜீவிதா தனது கணவரின் படுக்கைக்கு பல இளம்பெண்களை கட்டாயப்படுத்தி அனுப்பியதாக தெரிவித்தார். இதுகுறித்து நடிகை ஜீவிதா, தான் இளம்பெண்களை அனுப்பியதை சந்தியா நேரில் பார்த்தாரா? என்று ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
 
சந்தியா கூறியதில் எந்த உண்மையும் இல்லை என்றும் சந்தியா தனது புகாரை நிரூபிக்க வேண்டும் என்றும் இல்லையேல் அவர்மீதும் அவர் கலந்து கொண்ட தொலைக்காட்சியின் மீதும் அவதூறு வழக்கு தொடரவுள்ளதாக ஜீவிதா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 
 
படுக்கைக்கு கட்டாயப்படுத்தி அழைத்து செல்ல இளம்பெண்கள் ஒன்றும் பாப்பாக்கள் இல்லை என்றும் ஆசிபாவுக்கு தனக்கு என்ன நடந்தது என்பது தெரியாத வயது, ஆனால் ஸ்ரீரெட்டி போன்றவர்களுக்கு என்ன நடக்கின்றது என்பது தெரியும். தெரிந்தே தவறுக்கு ஒத்துழைத்துவிட்டு பின்னர் குற்றங்கூறுவது மற்றவர்களை ஏமாற்றும் செயல் என்றும் ஜீவிதா, ஸ்ரீரெட்டியையும் ஒரு பிடிபிடித்தார். 
 
மேலும் சந்தியா மீது நடிகை ஜீவிதா போலீசில் புகார் அளித்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.