1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 1 மே 2023 (15:10 IST)

கேரவனில் ஜெயம்ரவி இப்படி நடந்துக்கொண்டாரா? போட்டோ வெளியிட்டு அதிர்ச்சியளித்த சோபிதா துலிபலா!

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியானது. 
 
கலவையான விமர்சனத்தை பெற்ற இப்படத்தில் விக்ரம், த்ரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் பார்த்திபன், சரத்குமார், ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துலிபாலா, பிரகாஷ் ராஜ், நாசர் உள்ளிட்டோர் துணை வேடங்களில் நடித்திருந்தனர். 
இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால், கேரவனில் மேக்கப் போட்டுக்கொண்டு நடிக்க செல்ல சொன்னால் ஜெயம் ரவி அங்கேயே குட்டி தூக்கம் போட்டுள்ளார். இதனை அப்படத்தின் நடிகை சோபிதா துலிபலா புகைபடமெடுத்து ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளார். இந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.