வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 22 ஏப்ரல் 2023 (16:42 IST)

கமல் குரலில்....பொன்னியின் செல்வன் -2 பட கதை முன்னோட்ட வீடியோ ரிலீஸ்

பொன்னியின் செல்வன் -2  படத்தின் முன்னோட்ட வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது

லைகா 'சுபாஸ்கரன் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில்,.ஏ.ஆ.ரஹ்மான் இசையில், விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யாராய், திரிஷா ஆகியோர் நடிப்பில்  உருவான  பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வரும் நிலையில்,  ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகவுள்ளது.  கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீடு நடந்தது.

இந்த நிலையில்,  இப்படத்தின் முன்னோட்ட வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இதில், கமல்ஹாசன் குரலில்  இந்த முன்னோட்டம் அமைந்துள்ளது. கிபி 968 ஆம் ஆண்டில்   இருந்து ஆரம்பிக்கிறது.

இதில், பெரிய பழுவேட்டையரின் மனைவி நந்தினி, பாண்டிய ஆபத்துதவிகளுடன் சேர்ந்து சோழ நாட்டிற்கு எதிராகச் சதியில் இறங்கினாள். இளவரசன் அருண்மொழிவர்மனை இலங்கையில் இருந்து சிறைப்பிடித்து வர அரசரைக் கொண்டே ஆணையிட்டாள். அருள்மொழி இறந்ததாகப் பரவிய செய்தியால், நாடு கொந்தளித்தது.  இதற்குக் காரணம் நந்தினி என்று கருதி ஆதித்ய கரிககாலன் தஞ்சையை நோக்கி விரைவதாக’’ இந்த டீசரில் அமைந்துள்ளது.

இந்த டீசர் ரசிகர்களைக் கவர்ந்துள்ளதால் வைரலாகி வருகிறது.