படப்பிடிப்பில் காயம் – மூச்சுவிடாத ஜெயம் ரவி


Cauveri Manickam| Last Modified வெள்ளி, 19 மே 2017 (10:37 IST)
படப்பிடிப்பில் காயம்பட்டபோது, அதை யாரிடமும் சொல்லாமல் தொடர்ந்து நடித்திருக்கிறார் ஜெயம் ரவி.

 
 
சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துவரும் படம் ‘டிக் டிக் டிக்’. ஸ்பேஸ் த்ரில்லர் படமான இதில், பயங்கரமான ஆக்‌ஷன் காட்சிகள் இருக்கின்றன. சமீபத்தில் ஒரு சண்டைக் காட்சியை மூணாறில் படமாக்கியிருக்கிறார்கள். அப்போது ஜெயம் ரவிக்கு அடிபட்டிருக்கிறது.
 
ஆனால், அதைப்பற்றி யாரிடமும் சொல்லவில்லையாம் ஜெயம் ரவி. அவருடைய அப்பா எடிட்டர் மோகன் வந்து விசாரித்த பிறகுதான் யூனிட்டில் உள்ளவர்களுக்கே தெரிந்திருக்கிறது. பதறிப்போன இயக்குநர் ஜெயம் ரவியை ஓய்வெடுக்கச் சொல்ல, அதை மறுத்துவிட்டு தொடர்ந்து 10 நாட்களுக்கு நடித்துக் கொடுத்தாராம்.
 
‘பேராண்மை’, ‘தனி ஒருவன்’ படங்களின் சண்டைப் பயிற்சியாளரான மைக்கேல் தான் இந்தப் படத்திலும் பணியாற்றுகிறார். மேஜிக் கலைஞராக ஜெயம் ரவி நடிக்க, ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார் டி.இமான்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :