ஜெயம் ரவியின் ‘பிரதர்’ இசை வெளியீடு எப்போது? இயக்குனர் எம் ராஜேஷ் அறிவிப்பு..!
ஜெயம் ரவி நடிப்பில் எம் ராஜேஷ் இயக்கத்தில் உருவான ‘பிரதர்’ என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் டப்பிங் உள்பட தொழில்நுட்ப பணிகள் சமீபத்தில் தொடங்கப்பட்டதாக செய்தி வெளியானது.
இந்த நிலையில் தற்போது ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் ஆகிய இருவரின் டப்பிங் பணிகள் முழுமையாக முடிந்து விட்டதாகவும் மற்ற நட்சத்திரங்களின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இயக்குனர் ராஜேஷ் ஆனது சமூக வலைத்தளத்தில் சற்றுமுன் தெரிவித்துள்ளார்.
மேலும் பின்னணி இசை அமைக்கும் பணி சுறுசுறுப்பாக நடைபெற்று வருவதாகவும் ஹாரிஸ் ஜெயராஜ் தனது முழு திறமையை பின்னணி இசையில் கவனித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
மேலும் தீபாவளிக்கு இந்த படம் வெளியாவது உறுதி என்றும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 21ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அன்றே இந்த படத்தின் டீசர் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா, சரண்யா பொன்வண்ணன், சீதா, நடராஜன் சுப்பிரமணியம், விடிவி கணேஷ், யோகி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு விவேகானந்த் சந்தோஷம் ஒளிப்பதிவும் அபிஷிஸ் ஜோசப் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.
Edited by Siva