வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 11 செப்டம்பர் 2024 (09:26 IST)

கார்த்திக் சுப்பராஜுடன் கூட்டணி அமைக்கும் ஜெயம் ரவி!

முன்னணி நடிகராக இருந்த ஜெயம் ரவி சமீபத்தில் சில தோல்விப் படங்களைக் கொடுத்தார். அதனால் அவர் கேரியரில் ஒரு தொய்வு ஏற்பட்டுள்ளது. இப்போது அவர் காதலிக்க நேரமில்லை. ஜீனி மற்றும் பிரதர் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அடுத்து அவர் நடிப்பில் தனி ஒருவன் 2 உருவாக உள்ளது.

இந்நிலையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் புதிய படத்தில் ஜெயம் ரவி நடிக்க பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது.  இந்த படம் உறுதியாகும் பட்சத்தில் அதை கார்த்திக் சுப்பராஜே தயாரிப்பார் என்றும் சொல்லப்படுகிறது. தற்போது ‘சூர்யா 44’ படத்தை இயக்கி வரும் கார்த்திக் சுப்பராஜ் அதை முடித்ததும் இந்த பட வேலைகளை தொடங்குவார் என தெரிகிறது.

ஜெயம் ரவியின் பிரதர் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ள நிலையில் அடுத்து காதலிக்க நேரமில்லை மற்றும் ஜீனி ஆகிய திரைப்படங்கள் வரிசையாக ரிலீஸுக்கு தயாராக உள்ளன.