அத்திவரதரை தரிசிக்க சென்ற நயன்தாராவை பார்த்து ஐயர் செய்த காரியம்! - வைரல் புகைப்படம்!

Last Updated: வெள்ளி, 16 ஆகஸ்ட் 2019 (14:36 IST)
காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் குளத்தில் வைக்கப்பட்டுள்ள அத்தி வரத பெருமாள் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை குளத்திலிருந்து வெளியே எடுக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார். 


 
40 வருடங்களுக்கு ஒருமுறை 48 நாட்கள் நடக்கும் இந்த வைபவத்தில் 24 நாட்களுக்கு சயன கோலத்திலும் மீதமுள்ள 24 நாட்களுக்கு நின்ற கோலத்திலும் அத்திவரதர் காட்சியளிப்பார். கோடிக்கணக்கான மக்கள் கடந்த 47 நாட்களாக தரிசித்து வருகின்றனர். இன்றுடன் இந்த வைபவம் முடிவடைவதால் கடைசி நாளில் கூட ஏராளமான பக்தர்கள் சென்று வழிபாட்டு வருகின்றனர். 
 
ரஜினிகாந்த் , லதா ரஜினிகாந்த் , சௌந்தர்யா ரஜினிகாந்த் , திரிஷா , உள்ளிட்ட பல்வேறு திரைபரபலங்கள் சென்று வழிப்பட்டு வந்ததையடுத்து  நேற்று அத்திவரத்தரை காண நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சென்றுள்ளார். 


 
அப்போது நடிகை நயன்தாரா வழிபட்டுக்கொண்டிருக்கும் சமயத்தில் அங்குள்ள ஐயர் ஒருவர் கேமராவை கொண்டு போட்டோ எடுப்பது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த அனைவரும் அந்த ஐய்யரை திட்டி வருகின்றனர். 


இதில் மேலும் படிக்கவும் :