காதலருடன் சென்று அத்தி வரதரை தரிசனம் செய்த நயன்தாரா

Last Modified வியாழன், 15 ஆகஸ்ட் 2019 (16:46 IST)
காஞ்சிபுரத்தில் உள்ள அத்திவரதர் கடந்த சில நாட்களாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் என்பது தெரிந்ததே. 24 நாட்கள் சயன நிலையிலும் 24 நாட்கள் நின்ற நிலையிலும் காட்சி அளித்த அத்திவரதரை தரிசிக்கும் கால அளவு நாளையுடன் முடிவடையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் அத்திவரதரை தரிசனம் செய்ய அரசியல்வாதிகள், கோலிவுட் திரையுலகினர், தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் என தினமும் லட்சக்கணக்கானோர் காஞ்சிபுரம் வருகை தருகின்றனர். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அத்திவரதரை தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அத்தி வரதரை தரிசனம் செய்ய தனது காதலர் விக்னேஷ் சிவன் உடன் காஞ்சிபுரம் வந்தார். அவர் அத்தி வரதரை தரிசனம் செய்த செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அத்தி வரதர் தரிசனம் செய்த நயன்தாராவுக்கு கோவில் நிர்வாகிகள் சிறப்பு பிரசாதம் வழங்கி கெளரவித்தனர்


இதில் மேலும் படிக்கவும் :