திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 4 டிசம்பர் 2020 (16:31 IST)

இசைஞானியிடம் ஆசி வாங்கிய இசைவாணி – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

இசைஞானி இளையராஜாவிடம் சமீபத்தில் சர்வதேச அங்கிகாரம் பெற்ற இசைக்கலைஞர் இசைவாணி ஆசி வாங்கியுள்ளார்.

உலகில்   உள்ள ஊடகங்களின் மிகவும் கவனிக்கப்படுவது பிபிசி ஊடகம். இந்த ஊடகத்தின் சார்பில் இந்த ஆண்டுக்கான சிறந்த பெண்கள் பட்டியலில் பா.ரஞ்சித்தின் தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் குழுவைச் சேர்ந்த கானா பாடகர் இசைவாணி இடம்பிடித்துள்ளார். வடசென்னையைச் சேர்ந்த இசைவாணி பிபிசி சிறந்த பெண்கள் பட்டியலில்  இடம்பிடித்துள்ளார்.

ஆண்டுதோறும் சமூகத்திற்கு சிறந்த பங்களிப்பு வழங்கும் பெண்களைக் சிறப்பிக்கும் பொருட்டு பிபிசி சிறந்த பெண்கள் பட்டியலை வெளியிடும்.இந்த நிலையில்,  இந்த ஆண்டில் 100 பேரை பிபிசி தேர்ந்தெடுத்துள்ளது. இந்தப் பட்டியலில் 100 இடங்கள் பிடித்தவர்களில் 4 பேர் பெண்கள்…அதில் இசைவாணி ஒருவர்தான் தமிழத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

இந்நிலையில் இந்த அங்கீகாரம் பெற்றதை அடுத்து அவர் இசைஞானி  இளையராஜாவை சந்தித்து ஆசி வாங்கியுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.