செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (17:28 IST)

வடசென்னை வாய்ப்புக்காக வெற்றிமாறனை திட்டிய நடிகை – ஏன் தெரியுமா?

வட சென்னை படத்தின் கதாபாத்திரத்துக்காக இயக்குனர் வெற்றிமாறனையே கண்டபடி திட்ட வேண்டிய சூழ்நிலைக்கு ஆளானாராம் ஐஸ்வர்யா ராஜேஷ்.

வடசென்னை படத்தில் அக்மார்க் வட சென்னை பெண்ணாக நடித்து அசத்தினார் ஐஸ்வர்யா ராஜேஷ். இதற்காக அவர் படத்தில் பல கெட்டவார்த்தைகளையும் பேசவேண்டிய சூழல் உருவானது. இதற்கான பயிற்சியின் போது இயக்குனர் வெற்றிமாறனே தன்னைக் கெட்டவார்த்தைகளில் எந்தளவுக்கு திட்டமுடியுமோ அந்த அளவுக்கு திட்ட சொல்லி அவரை பழக்கப்படுத்தியதாக இப்போது ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.