வருமான வரியில் கோலியை முந்தினாரா விஜய்?
கடந்த வருமான வரி ஆண்டில் கிரிக்கெட் வீரர்களில் அதிக வருமான வரி செலுத்தியவர்கள் பட்டியலை பார்ச்சூன் இந்தியா என்ற நிறுவனம் ஆய்வு செய்து வெளியிட்டுல்ளது. விளையாட்டு வீரர்களில் அதி வரி செலுத்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் விராட் கோலி. அவர் கடந்த ஆண்டில் மட்டும் 66 கோடி ரூபாய் வரி கட்டியுள்ளதாக பார்ச்சூன் இந்தியா என்ற ஊடகம் ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் அவரை விட அதிகமாக வரி கட்டியுள்ளார் நடிகர் விஜய். அவர் 80 கோடி ரூபாய் அளவுக்கு வருமான வரி கட்டியுள்ளார். அவரைப் போல மோகன் லால், ஷாருக் கான் ஆகிய நடிகர்களும் அதிக வரி கட்டியவர்கள் பட்டியலில் முன்னிலையில் உள்ளனர்.
அதிக வரி கட்டிய பிரபலங்களில் 2020 ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற இந்திய முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 38 கோடி ரூபாய் வருமான வரி கட்டியுள்ளார். இதே போல பல ஆண்டுகளுக்கு முன்பே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற மாஸ்டர் ப்ளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர். அவர் கடந்த ஆண்டு 28 கோடி ரூபாய் வருமான வரிக் கட்டியுள்ளார்.