1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வியாழன், 5 செப்டம்பர் 2024 (08:51 IST)

கோலிக்கு அடுத்து அதிக வருமான வரிக் கட்டும் கிரிக்கெட் பிரபலம் யார் தெரியுமா?

உலகளவில் கால்பந்து ஜாம்பவான்களான ரொனால்டோ மற்றும் மெஸ்ஸிக்கு அடுத்தபடியாக கொண்டாடப்படும் விளையாட்டு வீரராக கோலி உள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டில் கிரிக்கெட் வீரர்களில் அதிக வருமான வரி செலுத்தியவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அவர் கடந்த ஆண்டில் மட்டும் 66 கோடி ரூபாய் வரி கட்டியுள்ளதாக பார்ச்சூன் இந்தியா என்ற ஊடகம் ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது.

இவருக்கு அடுத்த இடத்தில் 2020 ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற இந்திய முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 38 கோடி ரூபாய் வருமான வரி கட்டி இரண்டாம் இடத்தில் உள்ளார். அடுத்த இடத்தில் இருப்பது பல ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வு பெற்ற மாஸ்டர் ப்ளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர். அவர் கடந்த ஆண்டு 28 கோடி ரூபாய் வருமான வரிக் கட்டியுள்ளார்.

இதே போல கங்குலி 23 கோடி ரூபாயும், ஹர்திக் பாண்ட்யா 13 கோடி ரூபாயும், ரிஷப் பண்ட் 10 கோடி ரூபாயும் வருமான வரிக் கட்டி அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இதில் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மாவின் பெயர் முன்னிலையில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.