மோசமான விமர்சனங்களை அடுத்து சில காட்சிகளைக் கட் செய்த இறைவன் படக்குழு!
ஜெயம் ரவி ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள இறைவன் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று இந்த படம் ரிலீஸ் ஆனது. படத்தில் வன்முறைக் காட்சிகள் அதிகமாக இருப்பதால் ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் படம் 2 மணிநேரம் 33 நிமிடம் ஓடுவதாக உருவாக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த வெள்ளிக் கிழமை இந்த படம் ரிலீஸ் ஆன நிலையில் படம் பாரத்த ரசிகர்கள் படம் பற்றி நெகட்டிவ்வாக சமூகவலைதளங்களில் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். பலரும் இந்த படத்தை ஒரு சைக்கோ த்ரில்லர் படம் என நம்பி சென்று ஏமாந்துவிட்டதாகவும் புலம்பி தள்ளி வருகின்றனர்.
இந்நிலையில் அதிகரித்து வரும் நெகட்டிவ் விமர்சனங்களை அடுத்து படத்தில் 13 நிமிடக் காட்சிகளை படக்குழு ட்ரிம் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் இப்போது படம் 2 மணிநேரம் 16 நிமிடம் மட்டும் ஓடும் விதமாக குறைக்கப்பட்டுள்ளதாக சொலல்ப்படுகிறது.