திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 25 செப்டம்பர் 2023 (07:18 IST)

ஜெயம் ரவி வில்லனாக நடிக்க வந்த வாய்ப்பை மறுத்த விஜய் சேதுபதி… அவரே சொன்ன காரணம்!

ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடித்துள்ள இறைவன் படம் வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. என்றென்றும் காதல் மற்றும் மனிதன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய அகமது இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 25 ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த நாளில் ரிலீஸ் ஆகாமல் இப்போது செப்டம்பர் 28 ஆம் தேதி ரிலீஸுக்கு தள்ளி வைக்கப்பட்டது.

படம் சென்சார் செய்யப்பட்டு ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.. படத்தில் வன்முறைக் காட்சிகள் அதிகமாக இருப்பதால் ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் படம் 2 மணிநேரம் 33 நிமிடம் ஓடும் எனவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியுள்ளார் விஜய் சேதுபதி. அப்போது “ஜெயம் ரவியின் போகன் திரைப்படத்தில் அரவிந்த் சாமி நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் எனக்குதான் அழைப்பு வந்தது. ஆனால் அப்போது என்னால் கால்ஷீட் ஒதுக்க முடியாததால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை.” என பேசியுள்ளார்.