அஜித் ஒரு பாயும் புலி: 'தீரன்' வில்லன் அபிமன்யூ சிங்

Last Updated: செவ்வாய், 28 நவம்பர் 2017 (18:32 IST)
கார்த்தி நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் கார்த்தியை அடுத்து அனைவரையும் நடிப்பில் அசத்தியவர் வில்லன் அபிமன்யூசிங். அசல் கொள்ளைக்காரனுக்கு உள்ள குரூரத்தை தனது நடிப்பில் வெளிப்படுத்தினார். இந்த படத்தின் வெற்றியால் அவருக்கு தென்னிந்திய படங்கள் குவிந்து வருகிறது

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் 'அஜித் நடிப்பில் பாயும் புலி போன்று பவர்புல் ஆனவர். அவரது நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரது படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அதைவிட எனக்கு வேறு மகிழ்ச்சி கிடையாது' என்று கூறியுள்ளார்.

அஜித் நடிப்பில் சிவா இயக்கவுள்ள 'விசுவாசம்' படத்தின் வில்லன் யார் என்று இன்னும் செய்யப்படாத நிலையில் இந்த பேட்டியை அடுத்து அபிமன்யூசிங் வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :