1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 29 அக்டோபர் 2024 (07:19 IST)

பின்னணி இசைக்கென்றே தனி யுடியூப் சேனல்… இளையாராஜாவின் புதிய முன்னெடுப்பு!

தமிழ் சினிமாவில் இளையராஜா நிகழ்த்தியுள்ள சாதனைகளை இன்னொரு இசையமைப்பாளர் நிகழ்த்த முடியுமா என்று யோசிப்பது கூட சாத்தியமில்லாததுதான். கிட்டத்தட்ட 1500 படங்கள், 7000க்கும் மேற்பட்ட பாடல்கள் என இன்றும் சுறுசுறுப்பான இசையமைப்பாளராக வலம் வருகிறார்.

அவரின் பாடல் ஒன்றையாவது கடக்காமல் தமிழர்கள் தங்கள் நாட்களை முடிப்பதில்லை. அப்படிப்பட்ட இளையராஜாவின் பாடல்கள் மட்டும் இல்லாமல் படத்தின் காட்சிகளுக்கு அவர் அமைத்த பின்னணி இசைகளும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகின்றன.

சமீபகாலமாக தன்னுடைய கச்சேரிகளில் சில காட்சிகளின் பின்னணி இசையை மறு உருவாக்கம் செய்து நிகழ்த்திக் காட்டி வருகிறார். அவை ரசிகர்களுக்குப் புதுவிதமான அனுபவத்தைக் கொடுத்து வருகின்றன. இந்நிலையில் தன்னுடைய பின்னணி இசைகளுக்கெனவே அவர் தற்போது தனியாக ஒரு யுடியூப் சேனலைத் தொடங்கியுள்ளார். அதன் ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியான நிலையில்  விரைவில் பின்னணி இசைத் தொகுப்புகள் அந்த சேனலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.