வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 16 அக்டோபர் 2024 (14:36 IST)

என்னை ராசியில்லாத இசையமைப்பாளர்னு முத்திரைக் குத்திட்டாங்க.. அஜித் மட்டும்தான் நம்பினார்- மனம் திறந்த யுவன்!

தமிழ் சினிமாவில் கடந்த 25 ஆண்டுக்கும் மேலாக முன்னணி இசையமைப்பாளராக இயங்கி வருபவர் யுவன் ஷங்கர் ராஜா. அவர் இசையமைத்த பல பாடல்கள் இன்றளவும் இளைஞர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. ஆனால் சமீபகாலமாக அவரிடம் இருந்து நல்ல பாடல்கள் அதிகமாக  வரவில்லை. முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்தும் அவரால் தன்னுடைய பழைய பாடல்களுக்கு ஈடாக பாடல்கள் கொடுக்க முடியவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

சமீபத்தில் அவர் இசையமைத்த கோட் படத்தின் பாடல்களும் இந்த விமர்சனத்தில் இருந்து தப்பவில்லை. இந்நிலையில் யுவன் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் தன்னுடைய ஆரம்ப கால சினிமா பற்றி பேசியுள்ளார்.

அதில் “எனக்கு தீனா படம் வரை கமர்ஷியலாக வெற்றிக் கிடைக்கவில்லை. என் பாடல்கள் எல்லாம் ஹிட் ஆகும். ஆனால் படம் ப்ளாப் ஆகும். அதனால் என்னை ராசியில்லாத இசையமைப்பாளர் என முத்திரைக் குத்திவிட்டார்கள். அப்போது நான் வீட்டில் உக்காந்து அழுது கொண்டிருப்பேன். அப்போதுதான் அஜித் சார் என் வீட்டுக்கே வந்து “யுவன், தீனா படம்தான் நீதான் பண்ணுற.. நான் உன்னை முழுசா நம்புறேன்.” என சொல்லி அந்த பட வாய்ப்பைக் கொடுத்தார்.