ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 6 அக்டோபர் 2020 (21:16 IST)

''அருவா சண்ட'' பட டப்பிங்கின் போது அழுதுவிட்டேன் - பிரபல நடிகை

கமல் நடிப்பில் வெளியான நாயகன் படத்தில் அறிமுகமாகி தமிழர்களின் நெஞ்சங்களில் நல்ல குணச்சித்திர நடிகையாக இடம் பிடித்தவர் நடிகை சரண்யா பொன்வண்ணன்.

இவர் ராம், தென்மேற்குப் பருவக்காற்று, எம்-மகன் உள்ளிட்ட படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்பத்தியுள்ளார்.

இந்நிலையில், ’’அருவா சண்ட’’ என்ற படத்தில் குணச்சித்திர வேடத்தில் அவர் நடித்து வருகிறார்.

இப்பட ஆவணக் கொலைகள் பற்றிப் பேசுவதாகத் தகவல் வெளியாகிறது. இப்படத்திற்கு வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார், தரண் இசையமைத்துள்ளார். ஆதிராஜன் என்பவர் இயக்குகிறார். இப்படத்தின் ஹீரோவாக  வி.ராஜா நடிக்கிறார்.

மேலும் இப்படத்திற்குத் தான் டப்பிங் பேசுகையில் அழுதுவிட்டதாக  சரண்யா பொன்வண்ணன் தெரிவித்துள்ளார்.