புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 3 அக்டோபர் 2020 (15:10 IST)

கபிலன் வைரமுத்துவின் அம்பறாத்துணி… வெளியிட்ட இயக்குனர் ஷங்கர்!

வைரமுத்துவின் இரண்டாவது மகன் கபிலன் வைரமுத்து எழுதியுள்ள சிறுகதை தொகுப்பான அம்பறாத்துணி என்ற புத்தகத்தை இயக்குனர் ஷங்கர் வெளியிட்டுள்ளார்.

வைரமுத்துவின் இரண்டாவது மகனான கபிலன் வைரமுத்து சிறுகதைகள், கவிதை தொகுப்பு ஆகியவற்றின் மூலமாக கவனம் பெற்றுள்ளார். அதுமட்டுமில்லாமல் சினிமாக்களும் கதை வசனம் எழுதி வருகிறார். இந்தியன் 2 படத்தின் வசனகர்த்தாவாகவும் பணியாற்றினார். இந்நிலையில் அவர் புதிதாக எழுதியுள்ள அம்பறாத்துணி என்ற சிறுகதை தொகுப்பை இயக்குனர் ஷங்கர் இன்று வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக கபிலன் ‘வெள்ளித்திரையில் பிரம்மாண்ட கவிதைகள் படைக்கும் இயக்குனர் ஷங்கர் கரங்களால் என் சிறுகதை நூல் வெளியானதில் பெருமகிழ்ச்சி. இயக்குனருக்கு மனமார்ந்த நன்றி’ எனக் கூறியுள்ளார்.