பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியனுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி!
பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியனுக்கு கொரோனா
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக திரையுலகப் பிரபலங்கள் சிலர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட தகவல்களை பார்த்தோம். குறிப்பாக நடிகர் விஷால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதன் பின்னர் மீண்டது குறித்த செய்திகளை சமீபத்தில் பார்த்தோம்
இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு அதிர்ச்சி செய்தியாக பிரபல பின்னணி பாடகர் மற்றும் நடிகர் தயாரிப்பாளர் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
சமீபத்தில் அவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததாகவும் இதனையடுத்து அவருக்கு சோதனை செய்ததில் கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து அவர் சென்னை சூளைமேட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிகிறது
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு என்ற தகவல் திரையுலகினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது