திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 24 நவம்பர் 2023 (22:20 IST)

குஷ்பு மன்னிப்பு கேட்கவில்லை என்றால் வீடு முற்றுகை- காங்கிரஸ் எச்சரிக்கை

தமிழ்சினிமவின் பிரபல நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்புவுக்கு இணையவாசி ஒருவர் எக்ஸ் பக்கத்தில் அவரிடம் கேள்வி  கேட்டு பதிவிட்டிருந்தார்.

இதற்கு எக்ஸ் தளத்தில் பதில் அளித்த குஷ்பு திமுக இப்படித்தான் தவறான மொழியைப் பயன்படுத்துகிறது. இதுதான் அவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது. ஒரு பெண்ணை அவமதிக்கவும், மன்னிக்கவும் உங்களதது சேரி மொழியில் பேச முடியாது என்று தெரிவித்தார். பின்னர்  சேரி என்ற வார்த்தைக்கு பிரெஞ்சில் அன்பு என்ற பொருள் என்றும் அன்பு என்ற அர்த்தத்தில் தான் பேசினேன் என்றும் விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில்,  பட்டியல் சமூக மக்கள் குறித்த கருத்துக்காக மன்னிப்பு கேட்கவில்லை என்றால் வரும் திங்ட்கிழமை குஷ்புவின் வீடு முற்றுகையிடப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பட்டியல் அணி தலைவர் ரஞ்சன் குமார் எச்சரித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேரி என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்கு நடிகை குஷ்பு  கூறியதற்கு காயத்ரி ரகுராம், பா.ரஞ்சித் உள்ளிட்டோர்  கண்டனம் தெரிவித்த நிலையில், குஷ்பு மீது எஸ்.சி. எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி துறைமுகம் தொகுதி அமைப்பாளர் கார்த்திக் சென்னை காவலர் அலுவலகத்தில் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.