ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 24 நவம்பர் 2023 (17:21 IST)

'என்னென்ன பாதிப்புகள்?' அமைச்சர் செந்தில் பாலாஜியின் மருத்துவ அறிக்கை தாக்கல்!

senthil balaji
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மூளைக்கான எம்.ஆர்.ஐ பரிசோதனையில் வலதுபுறத்தில் அவருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
 
கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி மருத்துவ சிகிச்சைகளுக்கு பிறகு சிறையில் அடைக்கப்பட்டார். செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு  விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நிலை தொடர்பாக ஓமந்தூரார் பல் நோக்கு அரசு மருத்துவமனைக்கு கடந்த  22 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், மூளைக்கான எம்.ஆர்.ஐ பரிசோதனையில் வலதுபுறத்தில் அவருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் அமைச்சர் செந்தில் பாலாஜியின் முதுகெலும்பில் வீக்கம் இருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், அவருக்கு பித்தப்பை கற்கள் இருப்பதாகவும், நாளடைவில் அவர் உணவு உட்கொள்வதை அது குறைக்கும் எனவும் இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாயில் கால்சிய  படிவு உள்ளதாகவும்  அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜியின் காவல்  கடந்த 22 ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் டிசம்பர் 4 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது,