புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வெள்ளி, 6 மார்ச் 2020 (18:59 IST)

எனக்கு கோரோனா வைரஸா..? நான் நிலவேம்பு கசாயம் குடிச்சவன்டா - ஹிப்ஹாப் ஆதி கிண்டல் பதிவு!

இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் நுழைந்து பின்னர் ஹீரோ அவதாரம் எடுத்து வெற்றிகண்டவர்களில் ஒருவர்  ஹிப்ஹாப் தமிழா ஆதி. மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தாள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

மைக்கல் ஜாக்சனின் தீவிர ரசிகரான ஆதி அவரது ஜாம் என்ற பாட்டை கேட்டு பின்னர் அவரை போலவே ராப் பாடல்கள் பாடவேண்டும் என முடிவெடுத்தார். பின்னர் ஆதியும் ஜீவாவும் இணைந்து ஹிப்ஹாப் தமிழா என்ற இசைக்குழுவை ஆரம்பித்தனர். இவர்களது கூட்டணியில் வந்த அத்தனை பாடல்களும் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் தற்போது பாடல் , நடிப்பு என தொடர்ந்து பிசியாக இருந்து வரும் கோரோனா வைரஸ் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதாவது, " காற்று வீசும் பகுதிகளில் படப்பிடிப்புக்குச் செல்லும்போது, தூசிக்கு முகமூடி அணிந்தால், எல்லோரும் கொரோனா வைரஸ் இருப்பதாக நினைக்கிறார்கள் .  கொரோனாவிற்கு நோ ஏனென்றால், எங்களுக்கு நிலவேம்பு கிடைத்தது என கெத்தாக கூறி பதிவிட்டுள்ளார்.  ஆனால், இதை அவர் கிண்டலாக பதிவிட்டுள்ளதாக நினைத்து பலரும் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.