வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 14 டிசம்பர் 2020 (17:20 IST)

நட்சத்திர பட்டாளத்தோடு களமிறங்கும் ஹிப்ஹாப் ஆதி – படப்பிடிப்பு தொடக்கம்!

நடிகர் ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் புது படத்தின் பூஜை இன்று நடந்துள்ளது.

இசையமைப்பாளராகவும் பாடகராகவும் இருந்த ஆதியை ஹீரோவாக வைத்து சுந்தர் சி மீசைய முறுக்கு, நட்பே துணை மற்றும் நான் சிரித்தால் ஆகிய படங்களைத் தயாரித்தார். இதில் மீசைய முறுக்கு திரைப்படத்தை ஆதியே இயக்கினார். இதில் கடைசியாக உருவான நான் சிரித்தால் படத்தின் படப்பிடிப்பின் போது சுந்தர் சிக்கும் ஆதிக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் தனது அடுத்தடுத்த படங்களுக்கு ஹிப் ஹாப் ஆதியை விடுத்து வேறு சில இசையமைப்பாளர்களை ஒப்பந்தம் செய்துள்ளார்.

இந்நிலையில் ஆதி கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை விவேகம் மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களின் தயாரிப்பாளரான சத்யஜோதி தியாகராஜன் தயாரிக்க உள்ளாராம். இந்நிலையில் ஆதி நடிக்கும் நான்காவது படமான அன்பறிவு படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. இந்த படத்தில் ஆதியோடு விதார்த், நெப்போலியன், காஷ்மீரா பர்தேசி ஆகியோர் நடிக்க உள்ளனர். மற்ற கலைஞர்கள் மற்றும் நடிகர் நடிகைகள் குறித்த விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.