திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 21 நவம்பர் 2020 (15:56 IST)

2 கோடி ரூபாயில் அரங்கம் அமைக்கும் சுந்தர் சி – பிரம்மாண்டமாக உருவாகும் அரண்மனை!

அரண்மனை மூன்றாம் பாகத்துக்காக பொள்ளாச்சியில் 3 கோடி ரூபாயில் செட் ஒன்றை போட்டுள்ளாராம் இயக்குனர் சுந்தர் சி.

இயக்குனர் சுந்தர் சி வரிசையாக படங்களை இயக்கி வருகிறார். கொரோனா லாக்டவுனுக்கு முன்பாக அவர் இயக்கிய ஆக்‌ஷன் படம் வெளியானது. அதையடுத்து சூட்டோடு சூடாக வட இந்தியாவில் அரண்மனை 3 படத்தை இயக்கி வந்தார். கொரோனாவால் இப்போது அதன் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் சாக்லேட் பாய் ஆர்யாவை இந்த படத்தில் முதன் முதலாக பேயாக நடிக்க வைத்துள்ளாராம் சுந்தர் சி. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்த படத்தை மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகிறாராம் சுந்தர் சி. படத்தின் உச்சபட்ச காட்சிகளுக்காக பொள்ளாச்சியில் 2 கோடி ரூபாய் மதிப்பில் செட் அமைத்து அதில் சில காட்சிகளை படம்பிடிக்க உள்ளாராம். இந்த காட்சிகள் படத்தின் பேசுபொருளாக இருக்கும் என படக்குழுவினர் கடுமையாக உழைத்து வருகிறார்களாம்.