வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 10 ஜனவரி 2022 (19:32 IST)

திரையரங்குகள் மூடப்படும் என தகவல்: 8 பொங்கல் ரிலீஸ் படங்களின் நிலை கேள்விக்குறி!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் புதிய கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு இன்னும் சில நிமிடங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் தற்போது கசிந்துள்ள தகவலின் படி தமிழகத்தில் திரையரங்குகளில் மூட உத்தரவு பிறப்பிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
பொங்கல் தினத்தில் 8 திரைப்படங்கள் வெளியிட திட்டமிடப்பட்டு அதற்குரிய புரமோஷன் பணிகளூம் நடந்துள்ள நிலையில் திடீரென திரையரங்குகள் மூடப்பட்டால் ரிலீசாக இருக்கும் என்று திரைப்படங்களில் என்ன நிலை என்ன என்ற கேள்வி குறிதான் அனைவர் மனதிலும் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
திரையரங்குகள் மூடப்படும் என்ற தகவல் கசிந்துள்ளதை அடுத்து திரையுலகினர் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்