நேற்று ஒரே நாளில் ரூ.217.96 கோடிக்கு மது விற்பனை!
தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நேற்று ஒரே நாளில் ரூ.217.96 கோடிக்கு மது விற்பனை.
தமிழ்நாட்டில் முழு ஊரடங்கை ஒட்டி இன்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. மேலும் டாஸ்மாக் இயங்கும் நேரத்தையும் குறைக்க அரசு அலோசித்து வருகிறது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நேற்று ஒரே நாளில் ரூ.217.96 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் ரூ.50.04 கோடிக்கும், மதுரை மண்டலத்தில் ற்று.43.20 கோடிக்கும், திருச்சியில் ரூ.42.59 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.