செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Sasi)
Last Modified: சனி, 11 நவம்பர் 2017 (13:28 IST)

ஹீரோயினாக தமிழில் அறிமுகமாகிறார் அடா சர்மா

ஹீரோயினாக தமிழில் அறிமுகமாக இருக்கிறார் அடா சர்மா.

 
சிம்பு, நயன்தாரா நடித்த ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியவர் அடா சர்மா. ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களில் ஹீரோயினாக நடித்தவருக்கு, அங்கு பெரிதாக மார்க்கெட் இல்லை.
 
இந்நிலையில், தமிழில் ஹீரோயினாக அறிமுகமாக இருக்கிறார் அடா சர்மா. பிரபுதேவா நடிப்பில் சக்தி சரவணன் இயக்கும் ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் நடிக்கிறார். இந்த கேரக்டரில் ‘கருப்பன்’ தன்யா ரவிச்சந்திரன் நடிப்பதாக இருந்தது. ஆனால், அது இப்போது மாற்றம் கண்டுள்ளது. இன்னொரு ஹீரோயினாக நிக்கி கல்ரானி நடிக்கிறார்.