ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 10 நவம்பர் 2017 (12:11 IST)

வாட்டர் புரூப் ஆம்புலன்ஸ் விரைவில் அறிமுகம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

மழைக்காலத்தில் தண்ணீரிலும் செல்லும் வகையான வாட்டர் புரூப் ஆம்புலன்ஸ் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சற்றுமுன்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.



 
 
மழை, வெள்ளம் ஏற்படும்போது சாலைகளில் அதிகளவு தண்ணீர் தேங்கியிருந்தால் உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் வெள்ள நீரில் செல்ல முடியாத நிலை ஏற்படும். அப்படியே சென்றாலும் ஆம்புலன்ஸ்க்குள் நீர் புகுந்து நோயாளிகளுக்கு சிரமத்தை கொடுக்கும்
 
இந்த நிலையில் சென்னை ஐஐடி வாட்டர்புரூப் ஆம்புலன்ஸ் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக சென்னை ஐஐடி இயக்குனர் தெரிவித்தார். தண்ணீரில் செல்லக்கூடிய ஆம்புலன்ஸ் தயாரானவுடன் அவை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் இவை மழைக்காலத்தில் பெரும் உதவியாக இருக்கும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.