வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 9 நவம்பர் 2021 (21:33 IST)

நீண்ட இடைவெளிக்கு பின் தமிழுக்கு வரும் ஹேமாமாலினி!

நீண்ட இடைவேளைக்கு பின்னர் தமிழில் பிரபல பாலிவுட் நடிகை ஹேமமாலினி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
தமிழ் பெண்ணான ஹேமாமாலினி இது சத்தியம் என்ற தமிழ் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். ஆனால் அதன்பின் அவர் பாலிவுட் சென்று முன்னணி நடிகையாக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது
 
கமல்ஹாசன் நடித்த ’ஹே ராம்’ என்ற தமிழ் திரைப்படத்தில் மட்டும் இடையில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஹேமாமாலினி மீண்டும் தமிழுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் ஹேமமாலினி முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது