வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 9 நவம்பர் 2021 (20:57 IST)

ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க நாணயங்கள் வழங்கிய சூர்யா!

சூர்யா நடித்த ’எதற்கும் துணிந்தவன்’ படக்குழுவினர்கள் அனைவருக்கும் தங்க நாணயங்கள் பரிசாக அளித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’எதற்கும் துணிந்தவன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்தது என்பதும் தற்போது டப்பிங் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தங்க நாணயங்கள் பரிசுகளை சூர்யா கொடுத்ததாகவும் இதன் மொத்த மதிப்பு ரூபாய் ஒரு கோடி என்றும் கூறப்படுகிறது