வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: வியாழன், 31 ஜனவரி 2019 (10:34 IST)

பிரபல மலையாள நடிகர் ஶ்ரீனிவாசனுக்கு டப்பிங்கின் போது மாரடைப்பு

பிரபல மலையாள நடிகர் ஶ்ரீனிவாசன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவ மனையில் அனுமதிப்பட்டுள்ளார்.


 
பிரபல மலையாள நடிகரான ஶ்ரீனிவாசன் தற்போது 'குட்டிமாமா' என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டப்பிங் பணி கொச்சி நகரின் எடப்பாலி நகரில் லால் மீடியா ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை டப்பிங் கொடுத்து கொண்டிருந்த ஶ்ரீனிவாசனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக எர்ணாகுளம் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மாரடைப்பு காரணமாக நெஞ்சு வலி ஏற்பட்டதாக தெரிகிறது. ஐசியூவில் இருக்கும் ஶ்ரீனிவாசனை  வெண்டிலேட்டரில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.