1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (14:59 IST)

பழம்பெரும் நடிகைக்கு தாதா சாகேப் பால்கே விருது: மத்திய அரசு அறிவிப்பு!

asha
பழம்பெரும் நடிகைக்கு தாதா சாகேப் பால்கே விருது: மத்திய அரசு அறிவிப்பு!
பழம்பெரும் நடிகைக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது 
 
திரைத்துறையில் தன்னிகரற்ற சேவை ஆற்றி வரும் கலைஞர்களுக்கு தாதாசாகிப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது
 
ஏற்கனவே சத்யஜித்ரே, சிவாஜி கணேசன், கே பாலசந்தர், லதா மங்கேஷ்கர், கே விஸ்வநாத், ரஜினிகாந்த் உள்ளிட்ட பலருக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் கடந்த 1970களில் முன்னணி நடிகையாக இருந்த குஜராத்தை சேர்ந்த ஆஷா பரேக் என்பவருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் அனுராத் தாகூர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து நடிகை ஆஷா பரேக் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது