திமுக எம்.எல்.ஏ-வின் விருந்தில் 100 கெடா வெட்டி, ..10 கோடி ரூபாய் மொய் வசூல் !
தமிழகத்தில் முதன் முறையாக மிகபெரிய கெடா விருந்து வைத்து, அதன் மூலம் 10 கோடி ரூபாய் மொய் வசூல் செய்துள்ளார் திமுக எம்.எல்.ஏ அசோக்குமார்.
பேராவூரணி தொகுதி திமுக எம்.எல்.ஏ அசோக்குமார் தனது கிடா விருந்து ஒன்று ஏற்பாடு செய்திருந்தார். இது வழக்கம் போல் நடக்கும் சாதாரண விருந்தல்ல. இது தமிழ் நாட்டில் முதன் முறையாக மிக்கபெரிய விருந்தாக நடக்க திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது.
அதாவது, சுமார் 100 கெடா வெட்டி, 10000 பேருக்க் அசைவ விருந்து அழைப்பு விருத்து அவர்களும் அவந்து இந்த மெகா விருந்து கொண்டனர். இந்த விருந்தில் வந்து சாப்பிட்டவர்கள் ஒவ்வொருவரும் ரூ.1000 முதல் ரூ. 5 லட்சம் வரை மொய் எழுதியுள்ளார்.
இதன் மூலம் 10 கோடி ரூபாய் வரை வசூலாகியுள்ளது. இந்த மொய் எழுதும் இடத்தில் 10 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது, அதேபோல் செக்யூரிட்டுகளும் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.