வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 5 செப்டம்பர் 2024 (16:44 IST)

GOAT திரைப்படம் கமர்ஷியல் பேக்கேஜ் படம்.! குடும்பத்துடன் சென்று பாருங்கள் - கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி..!!

Varun Chakravarthy
விஜய் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள GOAT திரைப்படம் ஒரு கமர்ஷியல் பேக்கேஜ் படம் என்றும் இந்தப் படத்தை ரசித்து மகிழ்ந்தேன் என்றும் இந்திய கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
 
விஜய் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள GOAT திரைப்படம் ரசிகர்கள் மற்றும் பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை திரை உலக பிரபலங்கள் திரையரங்குகளுக்கு சென்று பார்த்து வருகிறார்கள். இப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு,  நடிகர் சிவகார்த்திகேயன், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், த்ரிஷா ஆகியோர் முதல் நாள் முதல் காட்சியை கண்டுகளித்தனர். 
 
இந்நிலையில் நடிகர் விஜயின் தீவிர ரசிகரான இந்திய கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி GOAT படத்தை பார்த்துவிட்டு பாராட்டி உள்ளார். தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “GOAT திரைப்படம் ஒரு கமர்ஷியல் பேக்கேஜ் படம். இந்தப் படத்தை ரசித்து மகிழ்ந்தேன். படத்தின் குழுவிற்கும் என்னுடைய வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். 

 
மேலும் படத்தில் நல்ல ஆச்சரியங்கள் இருக்கிறது. எனவே, அனைவரும் தங்களுடைய குடும்பங்களுடன் சென்று கண்டிப்பாக பாருங்கள்!! மட்ட பாடல்…. மனதை வருடும் என வருண் சக்கரவர்த்தி பதிவிட்டுள்ளார்.