நீங்க சித்ரா மாதிரியே இருக்கீங்க.. முல்லை கேரக்டர்ல நடிங்க!?- வைரலாகும் போட்டோஷூட்!
மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவை போலவே தோற்றம் கொண்ட பெண் ஒருவர் அவரை போலவே உடையணிந்து வெளியிட்டுள்ள போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சின்னத்திரை நடிகையான சித்ரா கடந்த சில நாட்கள் முன்னதாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மறைந்த நடிகை சித்ராவை நினைவு கூறும் விதமாக அவரை போலவே தோற்றம் கொண்ட பெண் ஒருவர் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். இதுகுறித்து கூறியுள்ள கீர்த்தனா என்ற அந்த பெண் “இன்று வரை என்னை வெளியில் யாராவது பார்த்தால் அல்லது எனது உறவினர்களே கூட என்னை பார்த்தால் நடிகை சித்ரா போலவே உள்ளதாக சொல்லிக் கொண்டிருப்பார்கள். அவர் இறந்தது எல்லாரையும் போல என்னையும் வருந்த செய்தது. அவர் தற்போது இல்லாததால் அவரது கதாப்பாத்திரத்தில் நடிக்க சீரியல் தயாரிப்பாளர்களிடம் தொடர்பு கொள்ள சொல்லியும் சொன்னார்கள். ஆனால் நான் சித்ராவுக்கு மரியாதை செய்யும் விதமாகவே இந்த போட்டோஷூட் செய்தேன்” என கூறியுள்ளார்.