திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: வெள்ளி, 13 ஏப்ரல் 2018 (13:39 IST)

பிரபாஸ் சண்டை போடுவதற்காக ரூ.40 கோடி செலவழிக்கும் படக்குழு

பிரபாஸ் நடிக்கும் ஒரு சண்டைக் காட்சிக்காக, 40 கோடி ரூபாய் செலவு செய்ய இருக்கிறார்கள்.

 
‘பாகுபலி’யைத் தொடர்ந்து பிரபாஸ் நடித்துவரும் படம் ‘சாஹூ’. சுஜீத் ரெட்டி இயக்கிவரும் இந்தப் படத்தில், பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் ஹீரோயினாக நடிக்கிறார். அருண் விஜய், நீல் நிதின் முகேஷ், ஜாக்கி ஷெராப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி என 3 மொழிகளில் இந்தப் படம் தயாராகி வருகிறது.
 
இந்தப் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு, துபாயில் உள்ள புர்ஜ் கலிபாவுக்கு அருகில் நடைபெற இருக்கிறது. இந்தப் படத்தில் மிகப்பெரிய சேஸிங் காட்சி ஒன்று இடம்பெற இருக்கிறது. ஹாலிவுட் படங்களுக்கு நிகராக அமையவிருக்கும் இந்தக் காட்சி, இந்திய சினிமாக்களிலேயே இல்லாத அளவிற்கு எடுக்கப் போகிறார்கள். இதற்காக 40 கோடி ரூபாயை செலவு செய்யத் தயாராக இருக்கிறது படக்குழு.