துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்தியாவுக்கு 16-வது தங்கம் வென்றார் அனிஷ் பன்வாலா

a
Last Modified வெள்ளி, 13 ஏப்ரல் 2018 (13:14 IST)
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியின் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் அனிஷ் பன்வாலா தங்கப்பதக்கம் வென்றார்
 
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியா ஏற்கனவே 15 தங்கப்பதக்கங்களை குவித்துள்ள நிலையில் தற்போது துப்பாக்கி சுடுதல் போட்டியில் மேலும் ஒரு தங்கப்பதக்கம் வென்றுள்ளது.
 
இன்று நடைபெற்ற ஆடவருக்கான 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் அனிஷ் பன்வாலா தங்கப்பதக்கம் பெற்றார். 
t
 
இதன்மூலம் தற்பொழுது வரை இந்தியா 16 தங்கம், 8 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 35 பதக்கங்கள் பெற்று தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது. 


இதில் மேலும் படிக்கவும் :