1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 24 ஜனவரி 2018 (22:14 IST)

ரஜினிக்காக இதை செய்த நிக்கி கல்ராணி

எஸ்.எஸ்.சூர்யா இயக்கத்தில் விக்ரம்பிரபு நடித்துள்ள படம் ‘பக்கா’. இந்தப் படத்தில் ஹீரோயினாக நிக்கி கல்ரானி நடித்துள்ளார். ‘நெருப்புடா’ படத்தைத் தொடர்ந்து இருவரும் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர்.
சூரி, ஆனந்தராஜ், சதீஷ், ரவிமரியா, சிங்கம்புலி, நிழல்கள் ரவி ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். சரவணன் ஒளிப்பதிவு செய்ய, சத்யா இசையமைத்துள்ளார். இப்படத்தில் முதல் முறையாக பக்கா படத்தில் விக்ரம் பிரபு இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். நிக்கி கல்ராணி ரஜினிகாந்தின் தீவிர ரசிகையாக நடித்துள்ளார். ரஜினிகாந்துக்காக மட்டுமே இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாக நிக்கி கல்ராணி தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து நிக்கி கல்ராணி கூறுகையில், ரஜினி ரசிகையாக நடிப்பது எனக்கு புதிதாக உள்ளது. படத்தில் மட்டும் அல்ல நான் நிஜத்திலும் ரஜினியின் தீவிர ரசிகை என்று கூறியுள்ளார்.