திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 3 நவம்பர் 2022 (17:13 IST)

சூப்பர் ஸ்டார் ரஜினியை காரில் ஏறவிடாமல் செய்த ரசிகர்கள் !

rajinikanath
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினியை காரில் ஏறவிடாமல் ரசிகர்கள் சூழ்ந்துகொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேற்கு வங்க மாநில கவர்னர் இல.கணேசனின் சகோதரர் இல, கோபாலனின் 80 வது பிறந்த நாள் விழா இன்று  சென்னையில் நடைபெற்ற நிலையில்,

இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக நேற்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சென்னை வந்தார்.அப்போது, முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பில் அரசியல் பேசப்படவில்லை என்று கூறப்பட்டது. இந்த நிலைஉயில், இந்த விழாவில் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் கலந்துகொண்டார்.

அவர் விழாவில் கலந்துகொண்டு, தன் காரிற்குச் செல்லும்போது, அவரைப் பார்த்த ரசிகர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு, செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.  ஒரு சில நிமிடங்கள் அவரை காரில் ஏற விடாமல் செல்ஃபி எடுத்ததால் அங்கு பரப்பரப்பு ஏற்பட்டது.

Edited by Sinoj